தலைப்புச் செய்திகள்

6/recent/ticker-posts

செங்கடலில் பற்றியெரியும் பிரித்தானிய எண்ணெய் கப்பல்!!


செங்கடலில் மீண்டும் ஹவுதி படைகளின் தாக்குதலுக்குப் பிரித்தானிய எண்ணெய் கப்பல் ஒன்று இலக்காகி தீப்பிடித்து எரிவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெரும் வர்த்தக நிறுவனமான Trafigura தொடர்புடைய தகவலை உறுதி செய்துள்ளதுடன், தங்களின் கப்பல் Marlin Luanda ஹவுதிகளின் ஏவுகணை தாக்குதலுக்கு இலக்கானதாகவும் குறிப்பிட்டுள்ளது.

லண்டனில் அலுவலகம் அமைந்துள்ள Trafigura நிறுவனம் தெரிவிக்கையில், 250 மீற்றர் நீளம் கொண்ட Marlin Luanda கப்பல் ஊழியர்களிடம் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்,

மேலும், பாதுகாப்பு கருதி ஊழியர்கள் அனைவரும் உயிர்காக்கும் படகுகளில் ஏறியுள்ளதாகவும், காயங்கள் தொடர்பில் தகவல் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர். தொடர்புடைய கப்பலில் நாப்தா எனப்படும் எளிதில் எரியக்கூடிய திரவம் ஏற்றப்பட்டுள்ளதாகவும், தீப்பிடித்து எரிவதால் இன்னும் ஆபத்து என்றும் குறிப்பிட்டுள்ளனர்

இதனிடையே, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ராணுவ கப்பல்கள் உதவிக்கு விரைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏமனில் உள்ள ஏதனில் இருந்து தென்கிழக்கே 60 கடல் மைல் தொலைவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இதனிடையே, அமெரிக்க இராணுவம் வெளியிட்டுள்ள தகவலில், வெள்ளிக்கிழமை ஏதன் வளைகுடாவில் யுஎஸ்எஸ் கார்னியே மீது ஹவுதிகள் ஏவுகணையால் குறிவைத்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

ஹமாஸ் படைகளுக்கு ஆதரவாக ஹவுதிகள் தங்கள் தாக்குதலைத் தொடங்கிய பிறகு, அமெரிக்க போர்க்கப்பலை நேரடியாக குறிவைப்பது இதுவே முதல் முறை என அதிகாரி ஒருவர் ரகசியமாக குறிப்பிட்டுள்ளார்.

Marlin Luanda கப்பலானது தாக்குதலுக்கு இலக்கான போது மார்ஷல் தீவுகளுக்கான கொடியுடன் சிங்கப்பூருக்கு பயணப்பட்டுள்ளது என்றே கூறப்படுகிறது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்