தலைப்புச் செய்திகள்

6/recent/ticker-posts

மனைவி இறந்த செய்தி கேட்டு மயங்கி விழுந்த கணவரும் உயிரிழப்பு!! சோகத்தில் மூழ்கிய கிராமம்!!



மனைவியின் இறந்த செய்தி கேட்டு அடுத்த நொடியே கணவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


தமிழக மாவட்டமான திருப்பத்தூர், வாணியம்பாடி அடுத்த பூங்குளம் கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் ராஜா (65) மற்றும் ஜோதி (60). இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர்.

இவர்கள் விவசாயம் செய்து குடும்பத்தை நடத்தி வந்தனர். இதில் மனைவி ஜோதிக்கு கடந்த 2 ஆண்டுகளாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தது.

இதனால், அவரது உறவினர்கள் ஜோதியை வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி ஜோதி திடீரென உயிரிழந்தார். இந்த செய்தியை கேட்ட அவரது கணவர் ராஜா, அடுத்த நொடியே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.


இந்த சம்பவத்தை அறிந்த வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் நேரில் சென்று இருவரது உடலுக்கும் அஞ்சலி செலுத்தினார். மேலும், அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

மனைவி இறந்த செய்தியை கேட்டு கணவர் உயிரிழந்த சம்பவத்தால், அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்