தலைப்புச் செய்திகள்

6/recent/ticker-posts

நாட்டில் வேகமாக அதிகரிக்கும் வாகனங்களின் விலை!!


நான்கு வருடங்களாக வாகன இறக்குமதி இடைநிறுத்தப்பட்டுள்ளதன் காரணமாக 15 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளதாக இலங்கை மோட்டார் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், சம காலத்தில் பாவித்த வாகனங்களின் விலை மிக வேகமாக அதிகரித்துள்ளதாகவும் குறித்த சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் இலங்கையில் மோட்டார் வர்த்தகர்கள் சங்கம் வெளியிட்டுள்ள செய்தியில்,


நாட்டில் பாவனைக்குட்பட்ட வாகனங்களுக்கும் VAT வரியை சேர்த்துள்ளதால் கறுப்புச் சந்தை உருவாகியுள்ளது. இதன் காரணமாக பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலை அதிகரித்து வருகின்றது.

தற்போதைய சூழ்நிலையின் காரணமாக, முறையான நிறுவனங்கள் பயன்படுத்திய வாகனங்களை விற்பனை செய்வதிலிருந்து முற்றாக விலக வேண்டிய நிலை ஏற்படும்.

இதனால் அரசாங்கம் இதுவரை பெற்று வந்த வரி வருமானத்தையும் இழக்க நேரிடும்.

மேலும் நான்கு வருடங்களாக வாகன இறக்குமதி இடைநிறுத்தப்பட்டதன் காரணமாக பதினைந்தாயிரம் பேர் வேலை இழந்துள்ளதுடன், வாகனத் தொழில் மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்