எம்.ஜி.ஆராக விஜயையும், ஜெயலலிதாவாக சங்கீதாவையும் சித்தரித்து மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்களின் ஒருவரான விஜய் அரசியலுக்கு வருவாரா என்ற கேள்வி பல ஆண்டுகளாக இருந்து கொண்டு தான் இருக்கிறது.
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல உதவிகளை செய்து வரும் விஜய், கண் தான திட்டம், குருதி கொடை, குழந்தைகளுக்கு பால், ரொட்டி வழங்கும் திட்டம் போன்ற உதவிகளை செய்து வருகிறார்.
மேலும், நடிகர் விஜய் மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கியும், 234 தொகுதிகளிலும் ஏழைஎளிய மாணவர்கள் கல்வி பயில 'தளபதி விஜய் பயிலகம்' என்னும் இரவுநேர பாட சாலை திட்டம் தொடங்கப்பட்டும் மாணவர்களுக்கு உதவி செய்து வருகிறார்.
இந்நிலையில் அவர், விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாகப் பதிவு செய்ய உள்ளது உறுதியாகியுள்ளது. மேலும், கட்சியின் பெயர் "தமிழக முன்னேற்ற கழகம்" எனவும் தகவல்கள் வந்துள்ளது.
இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மதுரைக்கென்றே போஸ்டர் ஓட்டும் கலாச்சாரம் தனித்துவமாக இருக்கும்.
குறிப்பாக அவர்களது பாணியில் போஸ்டரை ஓட்டுவார்கள். அந்தவகையில், நடிகர் விஜய்யை எம்.ஜி.ஆர் போலவும், அவரது மனைவி சங்கீதாவை ஜெயலலிதா போலவும் சித்தரித்து, ' நாங்கள் கண்ட புரட்சி தலைவரே - புரட்சி தலைவியே' எனக் குறிப்பிட்டு போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
இந்த போஸ்டர்கள் மதுரை மாநகர் தெற்கு மாவட்ட தொண்டரணி என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ளது. தற்போது இந்த போஸ்டர் வைரலாகி வருகிறது.
0 கருத்துகள்