மித்தெனிய - வலஸ்முல்ல பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து சம்பவம் நேற்று (08.2.2024) இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் வலஸ்முல்ல பகுதியை சேர்ந்த 17 வயதுடைய பாடசாலை மாணவனே உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
குறித்த மாணவர் தனது 2 நண்பர்களுடன் உந்துருளியில் பயணித்துக்கொண்டிருந்த போது வீதிக்கு அருகாமையில் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளனர்.
சம்பவத்தில் வலஸ்முல்ல பகுதியை சேர்ந்த 17 வயதுடைய மாணவன் உயிரிழந்துள்ளார்.
மேலும் காயமடைந்த ஏனைய இருவரும் எம்பிலிப்பிட்டிய பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
0 கருத்துகள்