தலைப்புச் செய்திகள்

6/recent/ticker-posts

அமெரிக்காவின் அதிரடி தாக்குதல்!! ஹிஸ்புல்லாவின் மூத்த தளபதி பலி!!


இஸ்ரேலின், பாக்தாத்தில் அமெரிக்க ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் ஈரான் ஆதரவு போராளிகளின் மூத்த தளபதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த தாக்குக்குதலில் ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவரும் அவரது இரண்டு காவலர்களும் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு அமெரிக்கப் படைகள் பொறுப்புக்கூறியுள்ளதாக பெண்டகன் செய்தி வெளியிட்டுள்ளது

பாக்தாத்தின் மாஷ்டல் பகுதியில் அமெரிக்க படையின் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதலில் பலியானவர்களில் ஒருவர் ஹிஸ்புல்லாவின் மூத்த தளபதி அபு பக்கீர் அல்-சாதி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

எனினும் இந்த தாக்குதலில் இணை சேதம் அல்லது பொதுமக்கள் உயிரிழப்புக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்று சென்ட்காம்அறிக்கை கூறியுள்ளது.

ஜோர்தானில் உள்ள ஒரு தளத்தில் அமெரிக்க துருப்புக்கள் மீது ஜனவரி 28 ஆம் நடந்த ஆளில்லா விமானத் தாக்குதலுக்குப் பதிலடியாக ஈராக்-சிரியா எல்லைப் பகுதியில் அமெரிக்கா 85 தாக்குதல்களை நடத்திய சில நாட்களுக்குப் பிறகு இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த தாக்குதலுக்கு அமெரிக்க பதிலடி கொடுக்கும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

ஜனவரி 4 ஆம் திகதி, பாக்தாத்தில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹரகாத் அல் நுஜாபா இயக்கத்தின் மூத்த தலைவர் கொல்லப்பட்டார்

ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் - காசா போர் தொடங்கியதில் இருந்து 165 க்கும் மேற்பட்ட வான்வெளி மற்றும் ட்ரோன் தாக்குதல்களை அமெரிக்க படைகள் மேற்கொண்டுள்ளன.

மேலும், செங்கடலில் வணிகக் கப்பல்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு பதிலடியாக, யேமனில் ஈரானுடன் இணைந்த ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அமெரிக்க இராணுவம் சமீபத்தில் தாக்குதல்களை நடத்தியது

கருத்துரையிடுக

0 கருத்துகள்