தலைப்புச் செய்திகள்

6/recent/ticker-posts

போதைப்பொருள் கடத்தலில் குடும்பத்தோடு சிக்கியவர்களுக்கு நேர்ந்த கதி!!


போதைப்பொருள் கடத்தல்காரரான ருவன் சமில பிரசன்ன என்றழைக்கப்படும் தெமட்டகொடை ருவன் என்பவரின் மனைவி, மகன் மற்றும் சகோதரி ஆகியோர் விளக்கம்றியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களை எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் பிரசன்ன அல்விஸ் இன்று (01) உத்தரவிட்டுள்ளார்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் இவர்களை நேற்று கைது செய்தனர்.

போதைப்பொருள் கடத்தல், விற்பனை மற்றும் பிற சட்டவிரோத வழிகளில் பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 100 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் அவர்களின் பெயர்களில் இருப்பது விசாரணைகளில் தெரிய வந்ததையடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.


அதேவேளை தரிந்து மதுசங்க என அடையாளம் காணப்பட்ட தெமட்டகொட ருவனின் 27 வயது மகன், முன்னணி அரசியல் கட்சி ஒன்றின் குப்பியாவத்தை தொகுதி அமைப்பாளர் எனத் தெரிவிக்கப்படுகிறது.




கருத்துரையிடுக

0 கருத்துகள்