வவுனியாவில் போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்த விசேட அதிரடிப் படையினர் களமிறக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
யாழில் போதைப் பொருள் பாவனை இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில் யாழில் மருந்து விற்பனை நிலையங்கள் மீது உணவு மற்றும் மருந்து பரிசோதகர்கள் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது வவுனியாவில் உள்ள அரச வைத்தியர் ஒருவரும், தனது தனியார் வைத்தியசாலையின் பெயரில் போதை மாத்திரைகளை கொள்வனவு செய்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இதையடுத்து வவுனியாவில் போதை மாத்திரைகள் விற்பனை மற்றும் விநியோகம் தொடர்பில் வடமாகாண சுகாதார திணைக்களத்தின் அறிவுறுத்தலின் அடிப்படையில் வவுனியா மாவட்ட பிராந்திய சுகாதார திணைக்களத்தின் உத்தரவுக்கமைய விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.
இந்த நிலையில், யாழில் போதைப் பொருள் கடத்தல், போதைப் பொருள் விற்பனை, போதைப் பொருள் பாவனை என்பவற்றை கட்டுப்படுத்த விசேட அதிரடிப் படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.
வவுனியாவிலும் போதைப் பொருள் பாவனை அதிகரித்து செல்வதாக வெளியாகி வரும் தகவல்களை அடுத்து வவுனியாவில் போதைப் பொருள் கட்டுப்படுத்தல் நடவடிக்கைகாக விசேட அதிரடிப்படையினர் களமிறக்கப்படவுள்ளனர்.
0 கருத்துகள்