தலைப்புச் செய்திகள்

6/recent/ticker-posts

ரூ.7 கோடி போக மேலும் ரூ.3.5 கோடி மதிப்புள்ள நிலத்தை பள்ளிக்கு தானமாக வழங்கிய மூதாட்டி!!


ரூ.7 கோடி மதிப்புள்ள நிலம் போக மேலும் ரூ.3.5 கோடி மதிப்புள்ள நிலத்தை மதுரை மூதாட்டி ஒருவர் அரசுப் பள்ளிக்கு தானமாக வழங்கியுள்ளார்.


தமிழக மாவட்டமான மதுரை, ஒத்தக்கடை அருகே உள்ள கொடிக்குளம் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ஆயி என்கிற பூரணம். இவர் அரசு வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் உக்கிர பாண்டியன், மகள் ஜனனி ஆகியோர் சில ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்தனர்.


இவருக்கு கொடிக்குளம் பகுதியில் 1.52 ஏக்கர் நிலம் சொந்தமாக உள்ளது. இந்த நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.7 கோடி ஆகும். இவர் இந்த நிலத்தை தனது கிராமத்தில் உள்ள நடுநிலை பள்ளியை உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்த தானமாக வழங்கியுள்ளார்.

மறைந்த மகள் ஜனனியின் நினைவாக பள்ளிக்கு நிலத்தை தானமாக வழங்கியுள்ளார். அதற்காக நிலத்தை பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார்.

பின்னர், குடியரசு தின விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆயி பூரணம் அம்மாளுக்கு முதலமைச்சரின் சிறப்பு விருதை வழங்கினார்.


இந்நிலையில், மதுரை கொடிக்குளம் பள்ளிக்கு மேலும் ரூ.3.5 கோடி மதிப்பிலான 91 செண்ட் நிலத்தை பூரணம் அம்மாள் தானமாக வழங்கியுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இவரின் இந்த செயலை பார்த்து பலரும் ஆயி பூரணம் அம்மாளுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்