கனடாவில் குடியேறும் நபர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதாக புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கினற்ன.
நாட்டிற்குள் குடிபெயர்பவர்கள் சில ஆண்டுகளில் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குடியேறுபவர்களில் 15 வீதமானவர்கள் தாயகம் அல்லது வேறும் மூன்றாம் நாடொன்றிற்கு செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டுக்குள் குடிப்பெயர்ந்து 20 ஆண்டு காலப் பகுதிக்குள் வெளியேறத் தொடங்கியுள்ளதாக புள்ளி விபரவியல் திணைக்கள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
1982ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் கனடாவிற்குள் குடியேறியவர்கள் பற்றிய தகவல்களின் அடிப்படையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் குடியேறி 3 முதல் 7 ஆண்டு காலப் பகுதிக்குள் வேறும் நாடுகளில் குடியேறுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த விபரங்களை வெளியிட்டுள்ளது.
வீடமைப்பு பிரச்சினை உள்ளிட்ட பல காரணிகளின் அடிப்படையில் குடியேறிகள் கனடாவை விட்டு புலம்பெயரத் தொடங்கியுள்ளனர்.
0 கருத்துகள்