தலைப்புச் செய்திகள்

6/recent/ticker-posts

வெளிநாட்டில் பணியாற்றும் மகள்!! குடிபோதையில் உயிரிழந்த பெற்றோர்!!

படல்கும்புர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அதிக மதுபானம் அருந்திய கணவன் - மனைவி உயிரிழந்துள்ளனர்.

கடந்த 25ஆம் திகதி மாலை அதிக மதுபானம் அருந்தியமையால் படல்கும்புர பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

இறந்த இருவருக்கும் இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில் மகள் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். மகன் பொத்துவில் பகுதியில் வசிக்கிறார்.

கடந்த 25ம் திகதி அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு, கோவில் அருகே மனைவி கீழே விழுந்ததையடுத்து, அக்கம்பக்கத்தினர் அவரை வீட்டுக்கு அழைத்து வந்தனர்.

அவரது கணவரும் குடிபோதையில் வீட்டினுள் விழுந்து கிடந்துள்ளார். பின்னர் இருவரும் படல்கும்புர பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவரும் உயிரிழந்துள்ளனர்.

இருவரின் மரணம் தொடர்பான விசாரணைகள் கடந்த 26ஆம் திகதி மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் இடம்பெற்றது. பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்