புற்றுநோயை ஏற்படுத்தும் பென்சின் என்ற இரசாயனம் வேதிப்பொருள் கலந்ததன் காரணமாக தனது தயாரிப்புகளை பிரபல யுனிலீவர் நிறுவனம் திரும்பபெற்றுள்ளது.
இந்த நிறுவனத்தின் உற்பத்தியில் பென்சீன் என்ற ஆபத்தான வேதிப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால், புற்றுநோய் ஏற்படும் என்று அமெரிக்காவின் எஸ்டி அமைப்பு எச்சரித்துள்ளது.
இந்நிலையில், கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கு முன்பு தனது தயாரிப்புகளில் புற்றுநோயை விளைவிக்கும் பென்சீன் கலந்துவிட்டதாகக் கூறி அவற்றை அமெரிக்க சந்தைகளில் இருந்து திரும்பப்பெறுவதாக அறிவித்துள்ளது.
அந்த வகையில், அக்டோபர் 2021 வரை தயாரிக்கப்பட்ட Dove , Nexuss ,Sueve , Tressme, Trigi போன்றவற்றை சந்தையில் இருந்து நிறுவனம் திரும்பப்பெறுவதாக அறிவித்துள்ளது.
ஏற்கனவே Pantene போன்ற பிரபலமான சாம்போக்கள் சந்தையில் இருந்து நீக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது..
0 கருத்துகள்